ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

🕔 August 6, 2023

யாழ்ப்பாணம் – பொன்னாலியில் 75 மில்லியன் ரூபாய் (ஏழரைக் கோடி ரூபாய்) பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவரை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று (05) கைது செய்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான வகையில் வீதியில் சென்ற லொறி ஒன்றை சோதனையிட்ட போது, அதிலிருந்து இந்த கஞ்சா மீட்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட வாகனத்தில் இருந்த 08 சாக்குகளில் சுமார் 227 கிலோ 915 கிராம் எடையுடைய 105 கேரள கஞ்சா பொதிகள் இருந்துள்ளன.

இதனையடுத்து கேரள கஞ்சா, அதனை கொண்டு வந்த லொறி ஆகியவை கைப்பற்றப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

வட்டுக்கோட்டை பொலிஸாரின் உதவியுடன் வடக்கு கடற்படை கட்டளை பிரிவினால் பொன்னாலை பகுதியில் மேற்படி விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த 75 மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என நம்பப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 31 வயதுடைய பண்டாரவளை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

போதைப்பொருள் மற்றும் லொறியுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்