லிட்ரோ எரிவாயு விலை மீண்டும் குறைகிறது

🕔 July 2, 2023

லிட்ரோ எரிவாயுவின் விலை எதிர்வரும் 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் திருத்தப்படவுள்ளது.

கடந்த மாத திருத்தம் போன்று இம்முறையும் எரிவாயுவின் விலை குறையும் என நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் மேற்கொண்ட விலைத் திருத்தத்தின் படி,12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டது.

அதன்படி தற்போது அதன் விலை 3,186 ரூபாவாக உள்ளது.

5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,281 ரூபாயாகவும், 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 598 ரூபாயாகவும் உள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்