தங்கம் கடத்திய அலி சப்ரி ரஹீம், மீண்டும் பிரமுகர் முனையம் வழியாக துபாய் பயணம்

🕔 May 27, 2023

ங்கம் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் அபராதம் விதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் – வியாழக்கிழமை (25) இரவு டுபாய் சென்றுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் வியாழன் இரவு 8 மணியளவில் ‘ஃப்ளை துபாய்’ விமானத்தில் பிரமுகர் முனையம் வழியாக நாட்டை விட்டு வெளியேறினார்.

இருந்தபோதிலும் இவரின் பயண நோக்கம் குறித்து தெரியவில்லை என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை (23) ‘ஃப்ளை துபாய்’ விமானத்தில் துபாயிலிருந்து இலங்கை திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், பிரமுகர் முனையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் 3.5 கிலோகிராம் தங்கத்துடன் தடுத்து வைக்கப்பட்டார்.

இதேவேளை அவரின் பயணப் பெட்டியில் 91 கைத் தொலைபேசிகளும் கண்டெடுக்கப்பட்டன.

பின்னர் அதே நாளில், 7.5 மில்லியன் அபராதத்துடன் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அலி சப்ரி ரஹிம் விடுவிக்கப்பட்டார்.

Comments