நாடு திரும்பினார் ஜனாதிபதி

🕔 May 8, 2023

மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (08) அதிகாலை நாடு திரும்பினார்.

மூன்றாம் சார்ல்ஸ் மற்றும் அவர் மனைவி கமிலா ஆகியோரின் முடிசூட்டு விழாவில் (06ஆம் திகதி) கலந்து கொள்ள அழைக்கப்பட்ட மற்ற உலகத் தலைவர்களுடன், குறித்த நிகழ்வில் ஜனாதிபதியும் இணைந்து கொண்டார்.

முடிசூட்டு விழாவுக்கு முன்னர் மே 5 திகதியன்று பொதுநலவாய நாடுகளின் தலைவர் மூன்றாம் சார்லஸ் முன்னிலையில் நடந்த, பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார்.

முதல் பெண்மணி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவும் இதில் கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தின் போது, இளைஞர்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் கல்வி சீர்திருத்தங்களை ஆதரிப்பதில் பொதுநலவாய நாடுகளின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். மேலும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் இணைப்பை வலுவூட்டுவதற்கு பொதுநலவாய நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இதற்கு மேலதிகமாக, கானா குடியரசின் ஜனாதிபதியை ஜனாதிபதி விக்கிரமசிங்க சந்தித்து பேச்சு நடத்தினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்