மாகாணசபை உறுப்பினர் ஜவாத்தின் நிதியிலிருந்து, கராத்தே உபகரணங்கள் கையளிப்பு

🕔 January 19, 2016

Jawad - 086
– எம்.ஐ.எம். அஸ்ஹர் –

ல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரிக்கு ஒரு லட்சம் ரூபா பெறுமதியான கராத்தே உபகரணங்களை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம். ஜவாத் இன்று செவ்வாய்கிழமை வழங்கினார்.

மாகாணசபை உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து  கொள்வனவு செய்யப்பட்ட மேற்படி கராத்தே உபகரணங்களை, கல்லூரி அதிபர் பீ.எம்.எம். பதுறுதீனிடம் மாகாணசபை உறுப்ப்பினர் ஜவாத் கையளித்தார்.

இந்நிகழ்வில்  பிரதி அதிபர் ஏ.பி. முஜீன், உதவி அதிபர்களான எம்.எச்.எம்.அபூபக்கர், எச்.எம். அன்வர் அலி , கராட்டி பொறுப்பாசிரியர் யூ.எல்.எம். இப்றாஹிம், பகுதித் தலைவர்களான எம்.ஐ.எம். அஸ்ஹர் , ஏ.ஆர்.எம். யூசுப் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம். அப்ராஜ் ரிலா  உட்பட  மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Jawad - 085

Comments

புதிது பேஸ்புக் பக்கம்