முன்னாள் சட்ட மா அதிபருக்கு பதிலாக, அவரின் சட்டத்தரணி பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜர்

🕔 April 19, 2023

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா – இன்று (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் இன்று ஆஜராகவில்லை.

ஆயினும் அவரின் சட்டத்தரணியொருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு ஆஜரான சட்டத்தரணி 7 பக்க சட்ட ஆட்சேபனையினை சமர்ப்பித்ததாக தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் தப்புல டி லிவேரா – சட்ட மா அதிபராக பதவி வகித்த போது சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டிருந்தமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

தொடர்பான செய்தி: முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்