முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு

🕔 April 18, 2023

முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா நாளை (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதித்திட்டம் குறித்த அவரது சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பான தகவல்களை பதிவு செய்வதற்காகவே அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

என்ன சொன்னார்?

ஈஸ்டர் தின குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு பின்­ன­ணியில் பாரிய சதித்­திட்­ட­மொன்று இடம்­பெற்­றுள்­ளதாக 2021ஆம் ஆண்டு அப்போது சட்ட மா அதிபராக இருந்த தப்புல டி லிவேரா ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்தார்.

சாட்­சி­யங்கள், உளவுத் தக­வல்கள் தொடர்­பான ஆவ­ணங்கள் மற்றும் ஏனைய தக­வல்கள் என்­பன மிகவும் கவ­ன­மாக மதிப்­பீடு செய்­யப்­பட்டு இத்­தாக்­கு­தலின் தலை­மைத்­துவம் தொடர்­பான தீர்மானத்தினை எட்­ட­வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தாார்.

அரச உளவுச் சேவையின் தக­வல்­க­ளின்­படி தாக்­குதல் இடம் பெற்ற நேரம் தாக்­கு­தலின் இலக்கு, தாக்குதல் நடத்­தப்­பட்ட முறை மற்றும் மேலும் தக­வல்­க­ளின்­படி பாரிய சதித்­திட்­ட­மொன்று இடம்பெற்றமைக்கான சாட்­சி­யங்கள் உள்­ளன என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்