லஞ்சம் பெற முயன்ற பொலிஸார் இருவருக்கு விளக்க மறியல்

🕔 April 13, 2023

ஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.

பொலன்னறுவை அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்கு 09 ஆயிரம் ரூபா லஞ்சம் கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பொலன்னறுவை பகுதியில் உள்ள முறைப்பாட்டாளரின் வீட்டில் வைத்து, மின்னேரிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் லஞ்சம் பெற்றுள்ளனர்.

சந்தேகநபர்கள் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்