மாணவர்களை தாக்கிய ஆசிரியர்கள் மற்றும் விடுதிப் பொறுப்பாளர்களுக்கு விளக்க மறியல்

🕔 March 15, 2023

னியார் பாடசாலையொன்றின் விடுதியில் வைத்து 10 மாணவர்களை தாக்கி கொடூரமான தண்டனைகளுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், நான்கு ஆசிரியர்கள் மற்றும் விடுதி பெண் பொறுப்பாளர்கள் இருவர் – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கண்டி – பொக்காவல பிரதேசத்திலுள்ள தனியார் பாடசாலையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் ஆசிரியர்கள் மற்றும் விடுதிப் பொறுப்பாளர்கள் நேற்று (14) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

05 சிறுமிகள் மற்றும் 5 சிறுவர்களை சந்தேக நபர்கள் ஞாயிற்றுக்கிழமை (12) தாக்கி கொடுமைப்படுத்தியதாக கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒழுக்காற்று பிரச்சினையின் காரணமாக மாணவர்கள் தாக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நான்கு ஆசிரியர்கள் மற்றும் விடுதிப் பொறுப்பாளர்கள் இருவர் நேற்று (14) கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட மாணவர்களை கண்டி பொது வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்