“போயா தினங்களில் வேறு வழியில்லை”: மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்குமாறு டயானா கோரிக்கை

🕔 March 12, 2023

போயா தினங்களில் வெளிநாட்டவர்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் யோசனையை சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்வைத்துள்ளார்.

போயா தினங்களில் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் மதுபானங்களை விற்பனை செய்யுமாறு ராஜாங்க அமைச்சர் முன்வைத்த யோசனை – அரசாங்க நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

“போயா நாட்களில் வெளிநாட்டவர்கள் மதுபானம் வாங்குவதற்கு வழியில்லை” என்று அவர் அந்தக் குழுக் கூட்டத்தில் கூறியுள்ளார்.

பார்கள் மற்றும் மதுபானக் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க வேண்டும் என்று டயானா கமகே இதன்போது முன்மொழிந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்