கட்டுப்பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் தெரிவிப்பு

🕔 February 15, 2023

ட்டுப்பணமாக செலுத்தப்பட்ட தொகையை தேர்தலுக்குப் பயன்படுத்துவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள்தாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் 186 மில்லியன் ரூபாவை கட்டுப்பணமாக செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கட்டுப்பணத்தை தேர்தலுக்குப் பயன்படுத்த முடியுமா என, சில அரசியல் கட்சிகள் யோசனைகளை முன்வைத்துள்ள என்றும் அவர் குறிப்பிட்டார்.

“அரசியல் கட்சிகள் தயாராக இருக்கும் பட்சத்தில் 186 மில்லியன் ரூபாவை தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஏற்றுக் கொள்ளுமாறு – திறைசேரிக்கு சத்தியக் கடதாசி மூலம் கோரிக்கை விடுக்க முடியும்”.

“இந்த பணம் தேர்தல் ஆணைக்குழுவில் வரவு வைக்கும் வகையில், தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பணமாகக் கருதி, வெற்றி பெற்ற பின்னர் அது மீளப் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது” என்றும் அவர் இதன்போது கூறினார்.

ஆனால் உண்மையான பிரச்சனை பணம் அல்ல என்பது எமக்கு தெரியும் எனக் கூறியுள்ள ரோஹன ஹெட்டியாராச்சி; தற்போது உள்ளது முன்னுரிமை தொடர்பான பிரச்சினையாகும் என்றார்.

“ஆனால் இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியை முறியடிக்கும் வகையில், கட்டுப் பணத்தை திறைசேரிக்கு வழங்குவதற்கு அரசியல் கட்சிகளுக்கு முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

காலியில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயங்களை அவர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்