உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதியை வழங்கக் கோரி, நிதியமைச்சுக்கு மீண்டும் கடிதம் அனுப்ப தீர்மானம்

🕔 February 15, 2023

ள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியை வழங்குமாறு கோரி, இன்றைய தினம் நிதியமைச்சுக்கு மீண்டும் கடிதம் ஒன்றை அனுப்ப எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இதனைக் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு 300 மில்லியன் ரூபா அவசியம் என, முன்னர் நிதியமைச்சுக்கு அறிவித்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இதுவரை 100 மில்லியன் ரூபா மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்காலத்தில் நிதியமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வருமாறு அவர்களுக்கு அறியப்படுத்தியுள்ளதாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹோ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வாக்கு சீட்டு அச்சிடும் பணிகளுக்காக 400 மில்லியன் ரூபா அவசியம் என அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

எனினும், அந்த நிதியில் 40 மில்லியன் ரூபா மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 360 மில்லியன் அவசியமாகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டாலும் விநியோக பணிகளுக்கு 3, 4 நாட்கள் செல்லும் என அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்