நெல் ஒரு கிலோவை 100 ரூபாவுக்கு நிபந்தனையுடன் கொள்வனவு செய்ய நிதியமைச்சு தீர்மானம்

🕔 February 13, 2023

விவசாயிகளிடமிருந்து நெல் ஒரு கிலோ 100 ரூபாவுக்குக் கொள்வனவு செய்யப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

பெரும் போகத்தில் அறுவடை செய்யப்படும் நாட்டு நெல் 14 வீதம் ஈரப்பதம் கொண்டிருப்பின், அதனை கிலோ 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

அதேவேளை, 14 – 22 வீதம் வரையிலான ஈரப்பதமுடைய நாட்டு நெல், ஒரு கிலோ 88 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும் எனவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் வடக்கில் விவசாயிகளைச் சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நெல் ஒரு கிலோவை 100 ரூபாவுக்கு அரசாங்கம் கொள்வனவு செய்யும் என உறுதியளித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்