தேர்தல் செலவுக்கு 770 மில்லியன் ரூபாவை வழங்குமாறு நிதியமைச்சிடம் ஆணைக்குழு கோரிக்கை

🕔 February 5, 2023

நிதி அமைச்சகத்திடம் 770 மில்லியன் ரூபாவை தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பெப்ரவரி மாத செலவின் பொருட்டு இந்தத் தொகை கோரப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா, எழுத்துமூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான அடிப்படைச் செலவினங்களைச் சமாளிப்பதற்காக, இந்த மாதத்துக்கு 770 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ள ஆணைக்குழுவின் தலைவர், இந்த நிதியை முழுமையாகவோ அல்லது தவணையாகவோ வழங்குமாறும் கேட்டுள்ளார்.

எதிர்வரும் தேர்தலுக்காக ஆணைக்குழுவிற்கு 37 மில்லியன் ரூபாவை நிதியமை்சு ஒதுக்கியுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்