அரச ஊழியர்களைக் குறைக்க நடவடிக்கை: ‘சுய ஓய்வு’ பொறிமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல தெரிவிப்பு

🕔 January 31, 2023

னைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்காக ‘சுய ஓய்வு’ பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவரதன தெரிவித்துள்ளார்.

இந்த ‘சுய ஓய்வு’ பொறிமுறையின் மூலம், திறமையற்ற பொதுத்துறை ஊழியர்கள் நீக்கப்படுவார்கள் என்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் கூறினார்.

அனைத்து திணைக்களங்களிலும் செலவினங்களைக் குறைக்குமாறு அனைத்து அமைச்சுக்களுக்கும் திறைசேரி வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரம் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த அமைச்சர், திறைசேரியின் சுற்றறிக்கைகளுக்கு அமைச்சின் செயலாளர்கள் அனைவரும் கட்டுப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அரச சேவையில் புதிதாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவித்த அவர், ஒரு அரச நிறுவனத்தில் வெற்றிடங்கள் நிலவுமாயின், அதிக ஊழியர்கள் உள்ள அரச துறை நிறுவனங்களிலிருந்து, குறித்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

“உதாரணமாக, 29,000 புதிய ஆசிரியர்களை பணிக்கு அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அரசு துறையின் உற்சாகமான கேடரில் இருந்து தேர்வு மூலம் பணியமர்த்தப்படுவார்கள்,” என்று அவர் கூறினார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்