அத்திமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பணி இடைநீக்கம்

🕔 January 15, 2023

த்திமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில், அத்திமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம். சஞ்சய் தர்மதாஸ, சிலதினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.

மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமாரவிடம் இருந்து பெருமளவான கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு – பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

650 க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் மற்றும் ‘மெட்டல் டிடெக்டர்’ (உலோகங்களைக் கண்டுபிடிக்கும் கருவி) ஆகியவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மொனராகல சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார – பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையிலேயே, அத்திமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்பான செய்தி: கஞ்சாவுடன் கைதான மொனராகல எஸ்.எஸ்.பி, பணியிலிருந்து இடைநிறுத்தம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்