புனிதத் தலங்களாக 26 இடங்கள், இந்த ஆண்டு அறிவிக்கப்படவுள்ளன: தேசிய பெளதிக திட்டமிடல் திணைக்களம் தெரிவிப்பு

🕔 January 11, 2023

– முனீரா அபூபக்கர் –

நாட்டிலுள்ள 26 இடங்களை, இந்த ஆண்டு – புனிதத் தலங்களாக வர்த்தமானியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தேசிய பெளதிக திட்டமிடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திஸ்ஸவ ரஜ மகா விகாரை, வெல்கம் வெஹெர ரஜ மகா விகாரை, மஹாசென் ரஜ மகா விகாரை, மெதகொட சித்த பத்தினி ஆலயம், பியகம சுதர்மாராம மகா விகாரை, பெபிலியான சுனேத்ரா மகாதேவி பிரிவேன, கம்பலேவ அம்பெவ ஸ்ரீ சுதர்மாராமய, பிலாகட்டுமுல்லை ஸ்ரீ புஷ்பராம புராண விகாரை, கிரிமதியான ஸ்ரீ சுதம்மவங்ஷாராம ரஜமஹா விகாரை, கப்பின்ன மகா விகாரை, மாகல்ல கச்சிவத்த புராண ராஜ மகா விகாரை, புத்தியாகம சீகல ராஜ மகா விகாரை, கங்கொடவில ஸ்ரீ விஜயராம விகாரை, இரத்மலானை புஷ்பாராமய, அஸ்கிரிய புராண ரஜ மகா விகாரை, மதுராவெல பல்லபிட்டிய வித்யாசேகர பிரிவேனா, பொத்துவில் கடல் மகா விகாரை, மஹாசென் ரஜ மகா விகாரை, புத்துருவயாய ரஜமஹா விகாரை, வரலாற்று புராதனமான ஹபரன தம்பிட்ட விகாரை, சோமாவதிய ரஜமஹா விகாரை, கந்தேகம தனஞ்ஜய ரஜ மஹா விகாரை, கந்தேகம நாமலுவ சிங்ககிரி ராஜ மகா விகாரை, பிபில வரலாற்று புகழ்மிக்க பியங்கல ரஜமஹா விகாரை, மாணியம்கம ரஜமகா விகாரை ஆகியவை – புனித தலங்களாக வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளன.

கடந்த ஆண்டில் 16 புனித தலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அரிசிமலய ரஜமகா விகாரை, நாகலேன ரஜமகா விகாரை, பம்பரகல காட்டு விகாரை, யானை மலை அரசன் மகா விகாரை, சங்கமலே பண்டைய அரசன் மகா விகாரை, அம்பாறை பியங்கல ரஜ மகா விகாரை, மகுல் மகா விகாரை, நாகதீப ரஜ மகா விகாரை, கூரகல ரஜ மகா விகாரை, கிரிவுள்ள மத்தேபொல ரஜ மகா விகாரை, நிகசலானுவர ரஜ மகா விகாரை, ஹுனுபிட்டிய கங்காராம விகாரை, கொட்டாஞ்சேன பரமானந்த ஆலயம், கெரகல பத்மாவதி பிரிவேன விகாரை, லுனுகம சிறி பரக்கும் விஹாரய, மஹியங்கனய ரஜ மஹா விகாரை ஆகியன கடந்த ஆண்டு வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்ட புனித தலங்கள் ஆகும்.

அதன்படி இலங்கையில் இதுவரை 101 புனித தலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. 1961 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி கதிர்காமம் இலங்கையின் முதல் புனித பூமியாக அறிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் 23ம் திகதி நாட்டில் 101வது புனித பூமியாக மகியங்கனை ரஜமகா விகாரை வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.

புனித தலங்களை அறிவிக்கும் போது 03 அளவுகோல்களின்படி அது செய்யப்படும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார். தேசிய, பிராந்திய மற்றும் உள்ளூர் ரீதியாக முக்கியமான இடங்கள் இப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

புனித தலங்களாக வர்த்தமானியில் வெளியிடப்படும் போது, தொல்பொருள் திணைக்களம் மற்றும் புத்தசாசன அமைச்சின் அங்கீகாரமும், நில அளவை வரைபடமும் அவசியம் என்று தேசிய பெளதிக திட்டமிடல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

Comments