தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய கட்சிகள், குழுக்களின் விவரம் வெளியீடு

🕔 January 11, 2023

ள்ளூராட்சி சபை தேர்தலுக்காக நேற்று (10) பிற்பகல் நிலவரப்படி 08 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கான கட்டுப்பணத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நேற்று செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் உள்ள நீர்கொழும்பு மாநகர சபைக்கான கட்டுப்பணத்தை ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி வைப்பிலிட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகரசபை தவிர்ந்த ஏனைய 11 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை, இலங்கை தமிழ் அரசுக்கட்சி கட்சி நேற்று செலுத்தியுள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் கல்பிட்டி பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை ஐக்கிய காங்கிரஸ் கட்சி நேற்று செலுத்தியது.

குருநாகல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி நேற்றைய தினம் வைப்பிலிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, 11 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 11 சுயேட்சைக் குழுக்கள் நேற்று கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்