17 நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வித் தகைமை தொடர்பில் தகவல் வழங்கத் தவறியுள்ளமை அம்பலம்
நாடாளுமன்ற உறுப்பினர்களில் 17 பேர் தமது கல்வித் தகைமை தொடர்பில் தகவல்களை வழங்கத் தவறியுள்ளனர்.
நேற்றைய நிலைவரப்படி 225 உறுப்பினர்களில், 208 பேரின் கல்வித் தகுதி தொடர்பான தகவல்கள், தற்போது நாடாளுமன்றத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
208 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதி தொடர்பான விவரங்களை தற்போது பொதுமக்கள் நாடாளுமன்ற இணையத்தில் காண முடியும்.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 208 பேர் தங்களின் கல்வி மற்றும் தொழில் தகுதிகளை நாடாளுமன்ற செயலகத்துக்கு அறிவித்துள்ளனர்.
இருந்தபோதிலும் 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தகவல்களை நாடாளுமன்ற செயலகத்திடம் ஒப்படைக்கவில்லை என ‘சண்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு பிறப்பித்த உத்தரவின்படி இந்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரங்களை www.parliament.lk என்ற இணையத்தளத்தில் உள்நுழைந்து, அந்த தளத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடைவு வகையை அணுகுவதன் மூலம் காணலாம்.