நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் வரை, தேர்தலை நடத்துவதற்கான பணி முன்னெடுக்கப்படும்: ஆணையாளர் சமன் ரத்நாயக்க

🕔 January 9, 2023

தேர்தலை ஒத்திவைப்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேலையல்ல எனவும், தேர்தல் கட்டளைச் சட்டத்தின்படி – சட்ட தேவைகளை நடைமுறைப்படுத்துவதே அதன் கடமை எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்படும் வரை, தேர்தல்கள் ஆணைக்குழு – தேர்தல் தொடர்பான தனது கடமைகளை முன்னெடுத்துச் செல்லும் என அவர் கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மக்களின் இறையாண்மையை நிலைநாட்டுவதும் தேர்தலை நடத்துவதற்கு நிதி வழங்குவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீடு உள்ளது, ஆனால் குறைந்த செலவில் நடத்துவதற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

2022 வாக்காளர் பதிவேட்டின்படி 1 கோடியே 68 லட்சத்து 56 ஆயிரத்து 629 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை – தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்