தேர்தல்கள் ஆணைக்குழுவை ரணில் அரசாங்கம் மிரட்டுவதாக சஜித் புகார்

🕔 January 7, 2023

தேர்தல்கள் ஆணைக்குழுவை மிரட்டி உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க ரணில் அரசாங்கம் முயற்சிக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் இந்த மிரட்டலுக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு அடிபணிந்து போகக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலை நடத்தும் முழு அதிகாரமும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றமும் சிறந்த தீர்ப்பை வழங்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தோல்விப் பயத்தாலேயே தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்