கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், கலால் வருமானம் குறையவில்லை: ஆணையாளர் தகவல்

🕔 November 18, 2022

லால் திணைக்களத்தின் 2022 வருவாயானது, 2021 இல் பெறப்பட்ட கலால் வருவாயுடன் சமமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மூலப்பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் லொக்டவ்ன் போன்ற பல சவால்கள் இருந்த போதிலும் வருமானத்தில் வீழ்ச்சி ஏற்படவில்லை.

கலால் திணைக்களத்தின் வருமானம்2021ஆம் ஆண்டு 139 பில்லியன் ரூபாயாக இருந்தது.

இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களுக்குள் எதிர்பார்த்த வருமான இலக்கை எட்ட முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது என கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி தெரிவித்தார்.

அதன்படி, 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் 165 பில்லியன் ரூபா கலால் வருவாய் இலக்கை அடைய முடியும் எனவும் கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபான போத்தல்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டும் வேலைத்திட்டத்தின் மூலம் வருமான கசிவைத் தடுப்பது இந்த ஆண்டு ஜனவரி 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதன் மூலம், வருவாயை விரைவாக அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த ஆண்டை விடவும் இவ்வருடம் மதுபானத்தின் விற்பனை 40% குறைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments