‘ட்விட்டர்’ அலுவலங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு: ஏராளமான பணியாளர் ராஜநாமா செய்துள்ளதாகவும் தகவல்

🕔 November 18, 2022

மது நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களும் தற்காலிகமாக மூடப்படும் என்று ‘ட்விட்டர்’ இன்று (18) அறிவித்துள்ளது. இது உடனடியாக அமுலுக்கு வரும் என்றும் கூறியுள்ளது.

நெவம்பர் 21 திங்கட்கிழமை அன்று அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று ஊழியர்களுக்கு ட்விட்டர் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கான காரணத்தை ட்விட்டர் வெளியிடவில்லை.

‘அதி தீவிரமாக நீண்ட நேரம் பணியாற்றுங்கள் அல்லது வெளியேறுங்கள்’ என்று ஈலோன் மஸ்க் தெரிவித்ததை அடுத்து, ஏராளமான ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக செய்திகள் வெளியாயின. இதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

மேலும், அந்தக் குறுஞ்செய்தியில், ‘தயவுசெய்து நிறுவனத்தின் கொள்கைகளுக்கு இணங்குவதைத் தொடரவும். சமூக ஊடகங்கள், செய்தி ஊடகங்கள், அல்லது பிற இடங்களில் நிறுவனத்தின் ரகசியத் தகவல்களைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்க்கவும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் ஈலோன் மஸ்க் ட்விட்டர் ஊழியர்களிடம், ‘அதிக தீவிரத்துடன்’ நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டும் அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினார்.

ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் நிறுவனத்தின் புதிய உரிமையாளர்; ‘ஊழியர்கள் தொடர்ந்து நீடிக்க விரும்பினால் இந்த உறுதிமொழியை ஏற்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமைக்குள் பதிவு செய்யாதவர்களுக்கு மூன்று மாத பணிநீக்க ஊதியம் வழங்கப்படும் என்றும் மஸ்க் கூறியுள்ளார்.

இந்த மாதத் தொடக்கத்தில் – ட்விட்டர் நிறுவனம் தனது பணியாளர்களில் 50 சதவீதத்தைக் குறைப்பதாகக் கூறியது.

ஈலோன் மஸ்க்கின் புதிய விதிமுறைகளை ஏற்காததால் தற்போது ஏராளமான ஊழியர்கள் தொழிலை ராஜினாமா செய்ததற்கான அறிகுறிகள் தென்படுவதற்கு மத்தியில், ட்விட்டர் தனது அலுவலகங்களை தற்காலிகமாக மூடிவிட்டதாக இன்றைய அறிவிப்பு வந்துள்ளது.

பெயர் வெளியிட விரும்பாத ஒரு முன்னாள் ட்விட்டர் ஊழியர் பிபிசியிடம் பேசும் போது; “இந்தப் பரபரப்பு அடங்கும்போது 2000க்கும் குறைவான ஊழியர்களே எஞ்சியிருப்பார்கள்” என, தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்