அமெரிக்காவிருந்து நாடு திரும்புகிறார் பசில்: காரணமும் வெளியானது

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, எதிர்வரும் சனிக்கிழமை நாடு திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது வரவு செலவுத் திட்டத்துக்கு 2/3 பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்களை அவர் ஆரம்பிக்கவுள்ளார் என டெய்லி மிரர் செய்தி செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்றிரவு அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட பசில் ராஜபக்ஷ சனிக்கிழமை இலங்கை வரவுள்ளார்.
இதனையடுத்து கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் போல், பொதுஜன பெரமுன கட்சியை மறுசீரமைக்கத் தொடங்குவார் என, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருந்தபோதும், வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்கக் கோரும் பொருட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதேஅவரின் உடனடி பணியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டுக்குப் பின்னர், புதிய தேர்தலுக்குச் செல்வதற்கான முடிவு எடுக்கப்படும் வரை, அரசாங்கம் எந்தவித இடையூறுமின்றி செயல்படும் வகையில் வரவு – செலவுத் திட்டத்துக்கு 2/3 பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
பொதுஜன பெரமுனவை பசில் மறுசீரமைப்பார் மற்றும் கட்சியின் அடிமட்ட ஆதரவைப் பெருறுவதற்காக, கீழ் மட்ட பிரச்சாரத்தை அவர் தொடங்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகுிறது.
மேலும், பசில் – நாடு திரும்பியவுடன் கட்சியில் பல்வேறு மாற்றங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.