துபாயிருந்து வந்தவருக்கு குரங்கு அம்மை: இலங்கையில் முதல் தடவை அடையாளம் காணப்பட்டது
இலங்கையில் முதன்முறையாக குரங்கு அம்மை நோய்த்தொற்று 20 வயதுடைய நபரிடம் கண்டறியப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து நொவம்பர் 01ஆம் திகதி வந்த 20 வயதுடைய இளைஞன் – முதல் நோயாளி என அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குரங்கு அம்மை என்பது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் ஆகும். இது சின்னம்மை நோயாளிகளிடம் கடந்த காலத்தில் காணப்பட்ட அறிகுறிகளைப் போன்றது. இருந்தாலும் மருத்துவரீதியாக குறைவான தீவிரத்தன்மை கொண்டதாக.
1980 இல் சின்னம்மை ஒழிப்பு மற்றும் சின்னம்மை தடுப்பூசி நிறுத்தப்பட்டதன் மூலம், குரங்கு அம்மை மிக முக்கியமான வைரஸாக பொதுமக்கள் மத்தியில் உருவெடுத்துள்ளது.
குரங்கு அம்மை முக்கியமாக மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவில் ஏற்படுகிறது. பெரும்பாலும் வெப்பமண்டல மழைக்காடுகளுக்கு அருகாமையில், நகர்ப்புறங்களில் தோன்றுகிறது.