பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கிச் சூடு: காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

🕔 November 3, 2022

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் வாசிரிபாத் நகரில் நடந்த போராட்டப் பேரணியின்போது சுடப்பட்டார்.

இன்று வியாழக்கிழமை மாலை நடந்த இந்த தாக்குதலில், அவரின் பிடிஐ கட்சியை சேர்ந்தவகள் நால்வதும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர்.

அவருக்கு காலில் அல்லது பாதத்தில் காயம் ஏற்பட்டுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவர் ஆபத்தில் இல்லை என்று ஒரு உதவியாளர் கூறியதாகக் தெரிவிக்கப்படுகிறது.

70 வயதான இன்ரான்கான் – விரைவில் தேர்தல் நடத்தக் கோரி தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 200 கிலோமீற்றர் தூரத்திலுள்ள வாசிரிபாத் பகுதியில் பேரணி மேற்கொண்டார்.

சிரேஷ்ட உதவியாளர் ஒருவர் இதுருறித்துத் தெரிவிக்கையில்; “இது அவரைக் கொல்லும் முயற்சி” எனக் கூறியுள்ளார்.

நபரொருவர் தானியங்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், பலர் காயமடைந்துள்ளனர் என்றும், இம்ரான் கானுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதேவேளை துப்பாக்கித் தாக்குதலை மேற்கொண்ட ஆண் ஒருவரை, அங்கிருந்த இன்ரான்கானின் ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர். பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்