அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக டொக்டர் ரொஷான் போல் நியமனம்

🕔 October 13, 2022

– அஹமட் –

க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக டொக்டர் ரொஷான் போல் (Roshan Paul) நியமிக்கப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம். ஹனீபா, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக – பதில் கடமையாற்றி வந்த நிலையில், தற்போது அந்த இடத்துக்கு டொக்டர் ரொஷான் போல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக பணியாற்றி வந்த போது, அவருக்கு எதிராக அரசியல் பின்புலத்தில் சிலர் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, அவர் அங்கிருந்து வெளியேறினார்.

இதனையடுத்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஆசாத் எம். ஹனீபா, அக்கரைப்பறு ஆதார வைத்தியசாலையின் பதில் கடமை வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையிலேயே தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக டொக்டர் ரொஷான் போல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, டொக்டர் ஆசாத் எம். ஹனீபா – சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகராக தொடர்ந்தும் கடமையாற்றி வருகின்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்