ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. சபையில் வாக்கெடுப்பு: இலங்கை கலந்து கொள்ளவில்லை

🕔 October 13, 2022

யுக்ரைனின் 4 பிராந்தியங்களை தமது நாட்டுடன், ரஷ்யா இணைத்துக்கொண்டமைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அண்மையில் யுக்ரைனின் பிராந்தியங்களான லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கேர்சன், ஜபோரிஜியா ஆகிய நான்கு பிராந்தியங்களில் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

குறித்த வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதாக கூறி, 4 பிராந்தியங்களையும் ரஷ்யா தம்முடன் இணைத்துக்கொண்டது.

இதனையடுத்து சர்வதேச விதிமுறைகளை மீறி, ரஷ்யா செயற்பட்டிருப்பதாக பல்வேறு நாடுகள் தமது கண்டனங்களை வெளியிட்டிருந்தன.

இந்தநிலையில், ரஷ்யாவுக்கு எதிரான பிரேரணையொன்று ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்டு, அது தொடர்பான வாக்கெடுப்பு ஒன்று இலங்கை நேரப்படி இன்று (13) அதிகாலை நடத்தப்பட்டிருந்தது.

குறித்த வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக 143 நாடுகளும், எதிராக 5 நாடுகளும் வாக்களித்தன.

அதேநேரம், இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட 35 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்