தலைப்புச் செய்திகள்

மூன்று துறைகளை அத்தியவசியமாக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதாரம் என்பவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம், எரிபொருள் உற்பத்தி மற்றும் விநியோகம் மற்றும் அனைத்து சுகாதார சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக இருக்கும்.

வைத்தியசாலைகள் உட்பட நோயாளர்களுக்கான சிகிச்சை நிலையங்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பங்களிப்புகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் இந்த அதிவிசேட வர்த்தமானி மூலம் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கமைய, ஜனாதிபதி செயலாளரின் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி நேற்று (03) வெளியிடப்பட்டுள்ளது.

பொது மக்கள் வாழ்க்கையை தடையின்றி கொண்டு செல்வதற்காக இந்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் விநியோகஸ்த்தர் சங்கத்தினர் இன்று (04) சேவை புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக முன்னறிவித்தல் விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.