லிட்ரோ எரிவாயு விலை மீண்டும் குறைகிறது

🕔 October 3, 2022

மையல் எரிவாயுவின் விலை நாளை மறுதினம் (05) நள்ளிரவில் மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலைச் சூத்திரத்தின்படி, திருத்தப்பட்ட விலை அன்றைய தினம் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

லிட்ரோ நிறுவனம் 12.5 கிலோ நிறைகொண்ட உள்நாட்டு எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 113 ரூபாவால் ஏற்கனவே குறைத்திருந்தது.

அதற்கமைய, 12.5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை தற்போது சந்தையில் 4,551 ரூபாவாக காணப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்