
– றிசாத் ஏ காதர் –
‘சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம்’ எனும் தொனிப்பொருளில் ‘சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிற்பதற்கான இளைஞர் முன்னணி’ ( AYEVAC) நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களில் சைல்ட் பன்ட் (Child Fund) நிறுவனத்தோடு இனைந்து ஏற்பாடு செய்த சிறுவர் தின நிகழ்வுகளில், அம்பாறை மாவட்ட நிகழ்வுகள் – தேசிய இனைப்பாளர் என்.ஜே. செரோன் அனாஸ் வழிகாட்டலில் நேற்று (02) சம்மாந்துறை முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஸ்பார்டன்ஸ் விளையாட்டுக் கழகம் (Spartans Sports Club) மற்றும் ஸ்பார்டன்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி (Spartans Sports Academy) ஆகியவை இணைந்து சிறுவர்களுக்கு உதைபந்தாட்ட போட்டிகளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் அதிதிகளாக வைத்தியர் எம்.என்.எம். தில்ஷான், கப்சோ (GAfso) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.ஜே. காமில், ஸ்பார்டன்ஸ் விளையாட்டுக் கழக தலைவர் எம்.எம்.எம்.எச். அர்கம், கிராம சேவகர்களான ஏ.பி.எம். றமீஸ் , எம். உதய ராஜன், ஓய்வு பெற்ற தபால் அலுவலகர் ஏ.எல்.எம். பஷீர், ‘சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிற்பதற்கான இளைஞர் முன்னணி’யின் மாவட்ட பிரதிநிதிகளான ஏ.எம். ஹிஷாம், சி.எம்.எம். சப்னாஸ், எம்.எஜப்ரான், எம்.சர்பான் மற்றும் எம்.ரி.ஏ.எச்.அன்பாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் சிறுவர்களின் எதிர்காலம் மற்றும் உரிமைகள் தொடர்பில் Gafso அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் காமில் உரையாற்றியதை தொடர்ந்து வைத்தியர் தில்ஷான் விளையாட்டின் மூலம் ஆரோக்கியமான சிறுவர் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.
நிகழ்வில் அதிதிகளால் சிறுவர்களுக்கு வெற்றிக் கேடயம் மற்றும் கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.



