தலைப்புச் செய்திகள்

ஊரடங்கு நேரத்தில் மாற்றம்

நாடளாவிய ரீதியில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 05 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இன்று இரவு 08 மணி முதல் – நாளை காலை 05 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், முன்னைய நேர அறிவிப்பில் தற்போது மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 09ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட பதட்ட நிலையை அடுத்து ஊடரங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.