
காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை பகுதியில் கடந்த 09ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 24 சந்தேக நபர்களை கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த 24 பேரில் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனும் உள்ளடங்குவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என, ஹிரு செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என கருதப்படும் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை கைது செய்யுமாறும் சட்டமா அதிபரால் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.



