பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 49 ரூபாவினால் அதிகரிப்பு

🕔 March 26, 2022

ரிபொருள் விலையை லங்கா ஐ.ஒ.சி நிறுவனம் அதிகரித்துள்ளது.

இதற்கமைய, சகல விதமான பெற்றோல் வகைகளின் விலைகளும் 49 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளன.

இந்த விலை அதிகரிப்பு இன்று (26) முதல் அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் ஒன்றின் புதிய விற்பனை விலை 303 ரூபாவாகும்.

அத்துடன், ஒக்டென் 95 ரக பெற்றோல் ஒன்றின் புதிய விற்பனை விலை 332 ரூபாவாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்