லாஃப்ஸ் எரிவாயு: 12.5 கிலோகிராம் சிலிண்டர் விலை 1359 ரூபாவினால் அதிகரிப்பு

🕔 March 20, 2022

மையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்க லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,359 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய விலை 4,199 ரூபாவாக அமையும்.

ஓகஸ்ட் 2021 இல் லாஃப்ஸ் எரிவாயு 12.5 கிலோ கிராம் 1493 ரூபாவிலிருந்து 1,856 ரூபாவாகவும், ஒக்டோபரில் 2,840 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டது. தற்போது 4,199 ரூபாவாக அதிகரித்துள்ளது.

05 கிலோ எடை கொண்ட லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 544 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க புதிய விலை 1680 ரூபாவாகும்.

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இந்த விலைஅதிகரிப்பு குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் லாஃப்ஸ் நிறுவன முகவர்கள் விலை அதிகரிப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்