உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: 146 இடங்களில் இலங்கை எங்கே உள்ளது?

🕔 March 20, 2022

லகின் சந்தோசமான நாடுகள்’ எனும் தலைப்பில் இவ்வருடம் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இலங்கைக்கு 127ஆவது இடம் கிடைத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் மொத்தமாக 146 நாடுகள் உள்ளன.

இதில் 146ஆவது இடத்தைப் பெற்று, உலகின் மகிழ்ச்சியற்ற நாடாக ஆப்கானிஸ்தான் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையை விடவும் மகிழ்ச்சி குறைந்த நாடாக இந்தியா உள்ளது. அது இந்தப் பட்டியலில் 136 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

உலகின் மிகவும் மகிச்சியான நாடாக பின்லாந்து உள்ளது. இந்தப் பட்டியில் தொடர்ந்தும் ஐந்தாவது தடவையாக அந்த நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிசர்லாந்து, நெதர்லாந்து, லக்சம்பேக், ஸ்வீடன், நோர்வே, இஸ்ரேல் மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகள் இடண்டாமிடம் தொடக்கம் 10ஆம் இடம் வரையில் பிடித்துள்ளன.

பட்டியலில் அமெரிக்கா 16ஆவது இடத்தினையும் பிரித்தானியா 17 ஆவது இடத்தினையும் பெற்றுள்ளன.

அறபு நாடுகளில் முதலாவது இடத்தினையும் மேற்படி பட்டியலில் 21ஆவது இடத்தினையும் பஹரைன் பிடித்துள்ளது.

கடைசிக்கு முந்தைய இடத்தை (145) லெபனான், அதற்கு முந்தைய இடத்தை (144) சிம்பாவே ஆகியவை பெற்றுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்