தலைப்புச் செய்திகள்

யுக்ரேன் உளவுத்துறை தலைமையகம் அருகே தாக்குதல்?

யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா ஆரம்பித்துள்ள நிலையில், யுக்ரேனிய பாதுகாப்பு அமைச்சின் உளவுத்துறை தலைமையகத்தில் கரும்புகை எழுவதைப் பார்ப்பதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

“உளவுத்துறை கட்டடத்துக்கு ஏதும் ஆகவில்லை. ஆனால், அதற்கு அடுத்ததாக ஒரு பெரிய தீயில் இருந்து புகை வருகிறது. சீருடை அணிந்தவர்கள் சில பைகளை நெருப்பில் வீசுவதை காண முடிகிறது” என நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே, தமது ராணுவ கட்டளை மையங்களை ரஷ்ய படையினர் தாக்கியிருப்பதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது.

கீஃபை அடுத்த ப்ரோவாரி நகரில், தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதல்களால் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதாக யுக்ரேன் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுவரை நடந்தவை

  • யுக்ரேன் மீது ரஷ்ய தலைவர் புடின் படையெடுப்பைத் தொடங்கினார்.
  • உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ராணுவச் சட்டத்தை அறிவித்தார்.
  • அவர் தனது நாட்டு பிரஜைகளை போரிடுவதற்கு அழைப்பு விடுத்தார். ஆயுதங்கள் விரும்பும் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் உக்ரைன் “வெற்றி பெறும்” என்றும் கூறினார்.
  • பல உக்ரைன் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
  • இந்த சண்டையில் சுமார் 50 ரஷ்ய படைகள் கொல்லப்பட்டதாகவும், ஆறு போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
  • இந்த நிலையில், ரஷ்யாவின் நடவடிக்கையை மேற்கத்திய நாடுகள் கண்டிக்கின்றன.
  • கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் ரஷ்யாவின் உதவியை கோரியதை அடுத்து நெருக்கடி அதிகரித்தது.
யுக்ரேன் குடியிருப்பு பகுதி மீது நடத்தப்பட்ட தாக்குதல்…