தலைப்புச் செய்திகள்

ரஷ்ய – யுக்ரைன் விவகாரம்: இலங்கை தனது நிலைப்பாட்டை அறிவித்தது

ரஷ்ய – யுக்ரைன் விவகாரத்தில், இலங்கை நடுநிலை வகிக்கும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே அறிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (25) முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இலங்கையின் நிலைப்பாட்டை அவர் தெரிவித்துள்ளார்.

“ரஷ்ய – யுக்ரைன் விவகாரம் தொடர்பில் இலங்கை தொடர்ச்சியாக உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

அத்துடன், அங்குள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது” எனவும் அவர் கூறினார்.

அதேநேரம், பெலாரஸில் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.