கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு: முஸ்லிம் மாணவர்கள் மட்டும், வேந்தர் ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டார்கள் என்பது உண்மையா?

🕔 December 20, 2021

– புதிது செய்தியாளர் அஹமட் –

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், வேந்தர் முருதெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களை பெறுவதற்கு சிங்கள மாணவர்கள் மறுப்புத் தெரிவித்ததாகவும், ஆனால் முஸ்லிம் மாணவர் மட்டும் முருதெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர் எனவும், சமூக ஊடகங்களில் உலவும் செய்தியில் உண்மைகள் இல்லை எனத் தெரியவருகிறது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா, இம்மாதம் 17ஆம் திகதி தொடக்கம் 19ஆம் திகதி வரை, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது கொழும்பு பல்கலைக்கழக வேந்தராக அண்மையில் நியமிக்கப்பட்ட முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், சில துறைகளைச் சேர்ந்த மாணவர்கள், தமக்கான சான்றிதழ்களை வேந்தரிடமிருந்து பெறுவதற்கு மறுப்புத் தெரிவித்திருந்ததோடு, அதனை உபவேந்தரிடமிருந்து பெற்றும் கொண்டனர்.

இந்த நிலையில் முஸ்லிம் மாணவர்கள் மட்டும் வேந்தரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டதாகவும், இதுதான் இஸ்லாம் கற்றுத்தந்த உயர்ந்த பண்பு எனவும் குறிப்பிட்டு, முஸ்லிம் மாணவியர் சிலர் – வேந்தரிடமிருந்து சான்றிதழ்களைப் பெறும் படங்களை சிலர் தமது பேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றமையினைக் காண முடிகிறது.

ஆனால் இந்தத் தகவல் தவறானதாகுகும். இதில் உண்மை என்னவென்றால், சில துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் தமக்கான சான்றிதழ்களை வேந்தரிடமிருந்து பெற மறுத்திருந்த நிலையில், சில துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் வேந்தரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

முஸ்லிம் மாணவர்கள் மட்டுமன்றி ஏனைய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களும் வேந்தரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர் என்பதே உண்மையாகும்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்