கஞ்சா வைத்திருந்தவருக்கு தண்டனை

🕔 December 9, 2015

Judgement - 01– எப். முபாரக் –

ஞ்சாவை தம் வசம் வைத்திருந்த ஒருவருக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஹயான் மீ ஹககே – பத்தாயிரம் ரூபாவினைத் தண்டமாக விதித்து இன்று புதன்கிழமை தீர்ப்பளித்தது.

திருகோணமலை மரத்தடி பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.அஜந்த குமார (வயது 36) என்பவருக்கோ, இந்தத் தண்டம் விதிக்கப்பட்டது.

மேற்படி நபர், திருகோணமலை மீன் சந்தைக் கட்டிடத் தொகுதியில் நேற்று செவ்வாய்கிழமை 1090மில்லி கிராம் கஞ்சாவைத் தம் வசம்  வைத்திருந்த போது, குறித்த நபரை திருகோணமலை பொலிஸார் கைது செய்து, திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது, சந்தேக நபருக்கு பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணத்தினை செலுத்துமாறும் அதனைத் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒருமாதம் சிறையில் வைக்குமாறும் நீதவான் தீர்ப்பளித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்