சீமெந்து விலை மேலும் அதிகரிப்பு

🕔 November 6, 2021

சீமெந்து ஒரு பக்கட்டின் விலையை மேலும் 177 ரூபாவினால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

அதன்படி  50 கிலோகிராம் எடைகொண்ட சீமெந்து பக்கட் ஒன்றின் புதிய  விலை 1,275 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஒக்டோபர் தொடக்கத்தில் சீமெந்து பக்கட்டின் விலை 93 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1,093 ரூபா என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதும் சந்தையில் 1400 ரூபாவுக்கும் அதிக தொகையில் சீமெந்து விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே தற்போது இரண்டாவது தடவையாக சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்