லொஹான் ரத்வத்த தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனு: கைதிகளை வேறு சிறைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

🕔 October 21, 2021

வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சம்மந்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் உடனடி விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்படடுள்ளது.

அனுராதபுரம் சிறையிலுள்ள எட்டு கைதிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு இன்று (21) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

ராஜாங்க அமைச்சர் ரத்வத்த, இரு சிறைச்சாலைகளிலும் குடிபோதையில் நுழைந்ததாகவும், அனுராதபுரம் சிறையில் எட்டு கைதிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அனுராதபுரம் சிறைச்சாலையின் எட்டு கைதிகள் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்தனர்.

நீதியரசர்கள் காமினி அமரசேகர, யசந்த கொடகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய மூவர் அடங்கிய குழு, இன்று விசாரணை தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டது.

குறித்த எட்டு கைதிகளையும் வேறு சிறைக்கு மாற்றுமாறு, அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு பெப்ரவரி 15 ஆம் திகதி மீண்டும் பரிசீலிக்கப்படும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்