எவன்காட் நிறுவனம் தனக்கு பணம் கொடுக்க முற்பட்டதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குற்றச்சாட்டு

🕔 December 5, 2015

Chandrika - 096வன்காட் நிறுவனம், தனக்கு பணம் கொடுக்க முற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

மோதரையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்;

“எவன்காட் நிறுவனத்தின் மாதாந்த இலாபம் ரூபாய் 430 மில்லியன் ரூபாய். இந்த கொடுக்கல் வாங்களில் பின்னால், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளார்.

எவன்காட் நிறுவனம் தொடர்பில்ட விசாரணை செய்யும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு 100 மில்லியன் ரூபாய் லஞ்சம் கொடுப்பதற்கு, எவன்காட் நிறுவனத்தின் தலைமை முற்பட்டது. ஆனால், அந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அதனை மறுத்து விட்டார்.

இதேவேளை, அவர்கள் என்னையும் சந்திக்க விரும்பினர், இந்தப் பக்கம் வந்தால் அடித்து விரட்டுவேன் என கூறிவிட்டேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்