கொவிட் காரணமாக நாட்டுக்கு இவ்வருடம் ஏற்பட்ட இழப்பு குறித்து நிதியமைச்சர் தெரிவிப்பு

🕔 September 7, 2021

கொவிட் நிலைமை காரணமாக நாட்டுக்கு இவ்வருடம் 1,600 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டம் தொடர்பில் இன்று (07) நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த அவர்; மறைமுக வரிகள் மூலமாக கிடைக்க வேண்டிய 1,600 பில்லியன் ரூபா வருமானத்தை அரசு இழந்துள்ளளது என்றார்.

அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்குவகிக்கும், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் மதுவரித் திணைக்களம் என்பன தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளதால் அதனூடாக கிடைக்க வேண்டிய வருமானமும் இல்லாதுபோயுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடனும், சர்வதேச நாணய நிதியத்துடனும் கலந்துரையாடி வருவதாகவும், இதன்போது, சலுகை கடன் முறைமை தொடர்பில் மாத்திரம் அவதானம் செலுத்துவதாகவும் நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்