பால்மா இறக்குமதிக்கான வரிச் சலுகையினால் அரசாங்கம் எதிர்கொள்ளும் நட்டம் தொடர்பில், நிதி ராஜாங்க அமைச்சர் தகவல்

🕔 August 18, 2021

பால்மா இறக்குமதிக்கு வரிச் சலுகை வழங்கியமை காரணமாக, அரசாங்கத்துக்கு மாதம் ஒன்றுக்கு 572 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

பால்மா விலை உயர்வடைவதை தடுப்பதற்காக கடந்த 11 ஆம் திகதி தொடக்கம் பால்மா நிறுவனங்களுக்கு அரசாங்கம் வரிச் சலுகையை வழங்கியுள்ளது.

இதன் காரணமாகவே, அரசாங்கத்துக்கு இவ்வாறு நஷ்டம் ஏற்படுவதாக அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார்.

பால்மாவின் விலையை சீராக வைத்திருப்பதற்காக அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு இதன் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்பான செய்தி: பால்மா மீதான இறக்குமதி வரி நீக்கம்: அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்