அமைச்சரவையில் மாற்றம்; சுகாதார அமைச்சரானார் கெஹலிய: நாமலுக்கு மற்றுமொரு அமைச்சு

🕔 August 16, 2021

மைச்சரவையில் இன்றைய தினம் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பவித்ரா வன்னியாராச்சி போக்குவரத்து அமைச்சராகவும், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மின்சக்தி அமைச்சராக காமினி லொக்குகே நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை ஊடகத்துறை அமைச்சராக டலஸ் அலகப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

இளைஞர் விவகாரம் விளையாட்டுத்துறைஅமைச்சுக்கு மேலதிகமாக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு அமைச்சராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்