தென்கிழக்கு பல்கலைக்கழக, கலை கலாசார பீடாதிபதியாக பேராசிரியர் பாஸில் தெரிவு

🕔 August 16, 2021

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாக, அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கலை கலாசார பீடத்திற்கான புதிய பீடாதிபதியினைத் தெரிவு செய்யும் நிகழ்வு இன்று (16.08.2021) காலை 10 மணிக்கு கலை கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ஏ. றமீஸ் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. இதில், தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தினுடைய உயர் சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் சபையினரின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில் பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் போட்டியின்றி கலை கலாசார பீடத்துக்கான புதிய பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பழைய மாணவரான பேராசிரியர் எம்.எம். பாஸில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அப்பீடத்தின் பீடாதிபதியாகச் செயற்படவுள்ளார்.

பேராசிரியர் பாஸில் – மருதமுனையை சொந்த இடமாகக் கொண்டவராவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்