பசில், விமல், கம்மன்பில ஆகியோருக்கிடையில் சந்திப்பு

🕔 July 12, 2021

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கும் இடையில் திடீர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சந்திப்பானது ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில், வார இறுதியில் இடம்பெற்றுள்ளதாக அரசியல் தரப்பு வட்டாரங்களை சுட்டிக்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சந்திப்பு வெற்றிகரமாகவும் சுமூகமாகவும் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்திப்பில் வைத்து அமைச்சர் பசில் ராஜபக்ஷ, எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பினை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளதால் அனைத்து அமைச்சர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கத்துக்குள் காணப்படும் நெருக்கடிகள் குறித்து ஆராய வேண்டும், கலந்துரையாட வேண்டும். அத்துடன் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அமைச்சர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஐக்கியத்துடன் செயற்படுவதற்கும் அரசாங்கத்துக்கு உறுதியான ஆதரவை வழங்குவதற்கும் இணங்கியுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பிரனராக வருவதற்கு எதிராக விமல் மற்றும் கம்மன்பில உள்ளிட்ட, அரசாங்கத்தினுள் அங்கம் வகிக்கும் சிறு கட்சிகளின் தலைவர்கள் சிலர் பேசி வந்தமை நிலையிலேயே இவர்களின் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்