பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் ரகசியத் திருணம்: ஒன்றாக குடும்பம் நடத்தி வந்த காதலியை நேற்று கைப்பிடித்தார்
🕔 May 30, 2021
![](https://puthithu.com/wp-content/uploads/2023/10/Kilakkin-Kedayam-750x150-01-.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2024/02/EFC-750X150-02.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2023/12/Atham-Lebbe-01-7500X150-.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2024/01/Abdullah-750X150-03-.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2021/05/Boris-Johnson-613.jpg)
பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது 56ஆவது வயதில் தன்றுடைய காதலியான 33 வயதான கேரி சைமண்ட்ஸை நேற்று சனிக்கிழமை ரகசியத் திருமணம் செய்து கொண்டார்.
லண்டனில் உள்ள ரோமன் கத்தாலிக்க வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக முறையில் இந்த திருமணம் நடந்தது.
ஆனால், பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் திருமணம் செய்து கொள்வது குறித்து அவரின் அலுவலகத்துக்கு கூட அதிகாரபூர்வமாக அவர் தெரிவிக்கவில்லை என்று ‘தி சன்’ நாளேடு தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு அம்சமாக 30 பேருக்கு மேல் திருமண நிகழ்வுகளில் பங்கேற்கக்கூடாது என்றகட்டுப்பாடு உள்ள நிலையில், பிரதமரின் திருமணத்தில் குறைந்தளவானோரே பங்கேற்றுள்ளனர்.
33 வயதான சைமண்ட்ஸுடன் பிரதமர் ஜோன்ஸன் கடந்த 2019ம் ஆண்டு முதல் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்யப்போவதாக கடந்த ஆண்டு பெப்ரவரியில் பொலிஸ் ஜோன்ஸன் அறிவித்திருந்தார். இருவருக்கும் ஒரு வயதில் வில்பிரட் என்ற மகன் உள்ளார்.
பொலிஸ் ஜோன்ஸனுக்கு இது 3-வது திருமணம், சைமண்ட்ஸுக்கு முதல் திருமணமாகும். ஜோன்ஸனுக்கு இதற்கு முன் நடந்த இரு திருமணங்களிலும் சேர்த்து 05 குழந்தைகள் குறைந்தபட்சம் இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுவரை அதிகாரபூர்வமாக குழந்தைகள் குறித்து ஜோன்ஸன் கூறியதில்லை.
பிரிட்டனில் பிரதமர் பதவியில் இருந்த போது ஒருவர் திருமணம் செய்து கொண்டமை ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்குப் பின் இதுதான் முதல் முறையாகும். கடைசியாக கடந்த 1822ம் ஆண்டு ரொபர் பென்க்ஸ் ஜென்கின்ஸன் பிரதமராக இருக்கும்போது திருமணம் செய்தார்.
தனக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்பதை ஜோன்ஸன் மறைந்தமைக்காக கன்சர்வேட்டிவ் கட்சியின் கொள்கைக் குழுவிலிருந்து முன்பு நீக்கப்பட்டிருந்தார். இரு மனைவிகளை விவாகரத்து செய்துள்ள அவர் இதுவரை தனக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறது என்பதை தெரிவித்தது இல்லை. கடைசியாக கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பரில் தனது 2-வது மனைவி மரினா வீலரை ஜோன்ஸன் விவாகரித்து செய்தார்.
பொரிஸ் ஜோன்ஸன், சைமண்ட்ஸ் திருமணம் குறித்து அறிந்த பல தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
![](https://puthithu.com/wp-content/uploads/2021/05/Boris-Johnson-75.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2024/03/Alahapuri-750X150-01.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2023/10/Fairoos-Express-750x150-01-.jpg)