வீட்டில் விற்பனைக்காக மறைந்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்கள்: காரைதீவில் சிக்கின
– நூருல் ஹுதா உமர் –
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு பிரதேசத்தில், சட்ட விரோதமாக அனுமதிப்பத்திரமின்றி வீட்டில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 80 மதுபான போத்தல்களை சம்மாந்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவின் காரைதீவு உப பொலிஸ் காவலரன் பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற ரகசிய தகவலையடுத்து சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் வழிகாட்டலில் காரைதீவு உப பொலிஸ் காவலரன் பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான கே.கே. அமரானந்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட மதுபானங்களையும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.